கூடலூரில் திமுக வேட்பாளருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு!!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தனித் தொகுதிக்குட்பட்ட நல்லூர் ஒன்றியத்தின் பல்வேறு ஊராட்சி பகுதிகளில், மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் திமுக வேட்பாளர் சி.வெ. கணேசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.கூடலூர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்வில், திமுக ஒன்றிய செயலாளர் சிவ. தியாகராஜசெம்பியன் தலைமையில், முன்னாள் நல்லூர்ஒன்றியபெருந்தலைவர் விசி.ஜெயராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் அவருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.மேலும், மாவட்ட பிரதிநிதி வேல்முருகன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வாஞ்சிநாதன், கிளை செயலாளர்கள், தொண்டரணி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்வில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு திமுக வேட்பாளருக்கு தங்களது ஆதரவை உறுதியாக வெளிப்படுத்தினர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்

கருத்துகள்
கருத்துரையிடுக