மதுரை சித்திரை திருவிழா வரலாறு!!
மதுரை மாவட்டம், ஒவ்வொரு வருடமும் மதுரையில் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு முன்பு 15 நாள் திருவிழாவாக சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது மீனாட்சி அம்மனின் பட்டாபிஷேகம் மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் போர் மற்றும் சுந்தரேஸ்வரர் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருந்தல் நிகழ்வு நடைபெறும்
நானூறு வருடங்களுக்கு முன்பு கள்ளழகர் அழகர் கோயிலில் இருந்து கிளம்பி தங்கக்குதிரை வாகனத்தில் அலங்காநல்லூர் வந்தடைகிறார் அலங்காரம் செய்து கொள்வதால் அலங்கார நல்லூர் என்று அந்த இடம் பெயர் பெற்றது. பிற்காலத்தில் அலங்காநல்லூர் என்று ஆகியது. அங்கிருந்து தேனூருக்கு வந்து வைகை ஆற்றில் இறங்கி பின் வண்டியூர் வந்து மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பார் அவ்விடம் மண்டூர் என பெயர் பெற்று பின் மருவி வண்டியூர் என ஆகியது அதன் பின் திருமலை நாயக்கர் மன்னன் காலத்தில் திருமலை நாயக்கர் இவ்விழா சைவ மற்றும் வைணவ ஒருமைப்பாடு விழாவாக கொண்டாடப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மாசி மாதம் நடைபெற்ற இத்திருவிழாவை சித்திரை மாதமாக மாற்றி கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியாக மாற்றி இன்று வரை இவ்விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது மீனாட்சி அம்மன்
மலையத்துவசன் மகளாய் மூன்று தனங்களுடன் பிறந்து பட்டத்து அரசியாக அரியணை ஏறி மதுரையை ஆண்டார் சொக்கநாதரை எதிர்த்து போரிட்டு சொக்கநாத பெருமானே போரில் வெற்றி பெற, தன் மனாளனை காணும் போது தான் தன் மூன்றாவது தனம் மறையும் என்பதன் படி தனம் மறைய தன் மணாளனை கண்ட வெட்கத்தில் முகம் சிவக்க, சுந்தரேச பெருமாளை கரம் பிடித்து திருமணம் இனிதே நடந்து இருவரும் மறுநாள் மாபெரும் தேரில் வீதி உலா வரும் வைபவம் நடைபெறும் திருமண விருந்தாக பலவித காய்கறிகளுடன் இனிப்புகளும் சேர்த்து விருந்து ஏற்பாடுகள் செய்யப்படும் பக்தர்கள் அனைவருக்கும் அம்மையின் திருமண விருந்து வழங்கப்படும் இதனிடையே தங்கை மீனாட்சி திருமணத்தை காண வரும் அண்ணன் கள்ளழகர், தான் வருவதற்கு முன்பாகவே திருமணம் முடிந்து விடுவதால் வைகை ஆற்றில் இறங்கி திருமணம் முடிந்த செய்தி அறிந்தவுடன் கோபத்தில் அப்படியே திரும்பிச் செல்லும் வைபவம் நடைபெறும் செல்லும் ஊரெல்லாம் கள்ளழகருக்கு திருவிழா நடைபெறும் கள்ளழகர் அன்றைய தினம் அணிந்த பட்டு நிறத்தை வைத்து நாடு அந்த வருடம் எவ்வாறு இருக்கும் என்பதை அறியும் விதமாக வெள்ளை ஊதா நிறத்தில் பட்டுடுத்தி வந்தால் நாடு சராசரி நிலையில் இருக்கும் எனவும் பச்சை பட்டு உடுத்தி வந்தால் நாடு செழிக்கும் எனவும் மஞ்சள் பட்டு உடுத்தி வந்தால் மங்களகரமாக இருக்கும் எனவும் சிவப்பு பட்டுடுத்தினால் போதிய விளைச்சல் இருக்காது எனவும் சொல்லப்படுகிறது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் பக்தர்கள் விரதம் இருந்து பீப்பாய்களில் தண்ணீர் நிரப்பி சாமிக்கும் பக்தர்கள் அனைவர் மீதும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வேண்டுதலும் நடைபெறும்
ஜாதி மத பேதமின்றி கொண்டாடப்படும் திருவிழாவான சித்திரை திருவிழா மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
சிவகங்கை மாவட்ட செய்தியாளர் கவிப்பிரியா.

கருத்துகள்
கருத்துரையிடுக