கோவை கவுண்டம்பாளையம் சட்ட மன்ற தொகுதியில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிட தேர்தல் அதிகாரியிடம் விருப்ப மனு வழங்கிய சமூக ஆர்வலர் புஸ்பாணந்தம்!!

கோவை தடாகம் சாலை சிவாஜி காலனி பகுதியில், வசித்து வருபவர், வழக்கறிஞர் புஸ்பாணந்தம். இவர் கடந்த 20 ஆண்டுகளாக ஏழை எளிய மக்களுக்கு, இலவச வீட்டு மனை பட்டாகள், முதியோர் உதவி தொகை, பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகளை வழங்கி வருகிறார். மேலும் சமூக ஆர்வலரான இவர், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் மாநில துணை தலைவராகவும் இருந்து வருகின்றார். இந்த நிலையில் ஏழை எளிய மக்களுக்கு சேவையாற்றும் நோக்கில், வருகின்ற 2026 சட்ட மன்ற தேர்தலில் கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிட உள்ளார். இதற்கான விருப்பமனுவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள, 

கோவை வடக்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான வினோத் குமாரிடம் அதற்கான மனுக்களை வழங்கினார். மேலும் நடைபெற்று முடிந்த 2020 சட்ட மன்ற தேர்தலிலும் தான் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிட்டதாகவும், அப்போது எங்களது கட்சிக்கு சிலிண்டர் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது. அதேபோல இந்த ஆண்டும் சிலிண்டர் சின்னத்தை தங்ககது கட்சிக்கு தந்து உதவுங்கள் என தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கேட்டு கொண்டார். 

இந்த வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியின் பொழுது, வழக்கறிஞர் குமாஸ்தா லட்சுமி, ஜெபா, திருவள்ளுவர் நகர் ராதா கிருஷ்ணன்,

குனியமுத்தூர் முருகன், பால்ராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!