திட்டக்குடியில் இருசக்கர வாகனத்தில் சென்று சமூக நலச்சங்கங்களை சந்தித்து ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளர் சி.வெ. கணேசன்!!


கடலூர் மாவட்டம் திட்டக்குடி தனித்தொகுதியில், மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் திமுக வேட்பாளர் சி. வெ. கணேசன் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திட்டக்குடி நகரில் செங்குந்த முதலியார், செட்டியார், விஸ்வகர்மா, யாதவர், முஸ்லிம் மற்றும் மார்வாடி சேட்டு சமூக நலச்சங்க உறுப்பினர்களை இருசக்கர வாகனத்தில் சென்று நேரில் சந்தித்து கலந்துரையாடினார். 

அப்போது பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, திமுக அரசின் சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்களை விளக்கினார்.இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.இந்த சந்திப்பு மற்றும் வாக்கு சேகரிப்பு நிகழ்வு தேர்தல் பரப்புரைக்கு மேலும் வலுசேர்த்ததாகக் கருதப்படுகிறது.. 

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!