லாரி டிரைவர் வெட்டிக்கொலை' திருமயம் அருகே பரபரப்பு!!
சிவகங்கை மாவட்டம், ஆத்தங்குடி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன்(27). லாரி டிரைவரான இவர் நேற்று மாலை நண்பர்களுடன் சேர்ந்து திருமயம் அருகே மலைக்குடிப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கிக்கொண்டு அங்கிருந்த கண்மாய் பகுதிக்கு அருந்த சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் லோகநாதனை சுற்றிவளைத்து அரிவாளால் தாக்கியது.
இதை பார்த்ததும் அவரது நண்பர்கள் தப்பியோடி விட்டனர். பின்னர் மர்மகும்பல் லோகநாதனை சரமாரியாக வெட்டி, கண்மாயில் வீசிவிட்டு சென் றனர். இதில் லோகநாதன் அதே இடத்தில் உயிரிழந்தார். தகவலறிந்ததும் பொன்னமராவதி டிஎஸ்பி சரவணன், திருமயம் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக