சென்னை ராயபுரத்தில் அதிமுக சார்பில் டோக்கன்கள் விநியோகம் தடுத்து நிறுத்திய திமுகவினர்!!
சென்னை ராயபுரம் சட்டமன்ற தொகுதி அதிமுகவினர் பொது மக்களுக்கு வீடு வீடாக சென்று டோக்கன்கள் வழங்கி வருபரை திமுகவினர் பிடித்தனர்.
பிடிபட்ட நபர்களின் கையில் சுமார் 200க்கும் மேற்பட்ட 02.06 2026 தேதி குறிப்பிட்டு போலி செக் லீப் மற்றும் ராயபுரம் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகைப்படம் மற்றும் கையெழுத்து பதிவு செய்யப்பட்ட பிரசுரங்கள் இருந்துள்ளது.
இதைக் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக