கோவை வடக்கு சட்ட மன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக, ஸ்டூல் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சத்ரபதி சிவாஜி அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு அனைத்து வகை அமைப்பு சாரா தொழிலாளர் நல நற்பணி நல சங்க நிறுவனருமான சரவணன் தனது தேர்தல் பரப்புரையை துவங்கினார்.

கோவை மாவட்டம்,கோவை சத்ரபதி சிவாஜி அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு அனைத்து வகை அமைப்பு சாரா தொழிலாளர் நல நற்பணி சங்க நிறுவனருமான  சரவணன், மக்கள் ஆசியுடன், கோவை வடக்கு சட்ட மன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகின்றார். இவருக்கு தேர்தல் ஆணையம் ஸ்டூல் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. அவ்வாறு ஒதுக்க பட்டுள்ள சின்னத்திற்கு வாக்க சேகரிக்கும் பணிகளை இன்று துவங்கினார். இவர் கோவை பாப்பநாயக்கன் புதூர் பகுதியில், உள்ள ஸ்ரீ பூமி நீளா தேவி சமேத வரதராஜ பெருமாள் திருக்கோவிலில், சிறப்பு பூஜைகள் செய்து தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். மேலும் இது குறித்து சரவணன் கூறுகையில், இன்று வாகன பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் துவங்கியுள்ளதாகவும், நாளை முதல், நேரடியாக மக்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். வடக்கு சட்ட மன்ற தொகுதியில் உள்ள பொதுமக்களின் தேவைகள் பல்வேறு உள்ளது. அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய பாடுபடுவேன் எனவும், மாதம் இருமுறை மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை உடனடியாக தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பேன். மக்கள் எந்த தேவைகளுக்காகவும் என்னை எப்பொழுதும் சந்திக்கலாம் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் 

தமிழ்நாடு அனைத்து வகை அமைப்பு சாரா தொழிலாளர் நற்பணி நலச்சங்க மாவட்ட தலைவர், கட்டுமான பிரிவு கருப்புசாமி, ஈஸ்வரன், கிருஷ்ணன், ரெத்தினம், நாகராஜ், அரவிந்த், சங்கர், மூர்த்தி, கோவிந்தன், மதியழகன், விஜி, சிவதாசன், ஆனந்தன், தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்கள் நற்பணி நலச்சங்கம் ஆட்டோ ஒட்டுநர்கள் பிரிவு  கோவை மாவட்ட தலைவர் ஜோசப், மாநகர தலைவர் இசக்கி ராஜா, இளைஞரணி நவீன் குமார், 

ஜெய் ஹனுமன் வெற்றி சேனா அமைப்பின் நிறுவனர் கே.எஸ். கனகராஜ், வெற்றி செல்வன், தீரன் சின்னமலை கவுண்டர் இளைஞரணி நிறுவனர் கவின், சத்ரபதி சிவாஜி அறக்கட்டளையின் பசியில்லா தமிழக அங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!