மதச்சார்பற்ற கூட்டணியின் முழு பலத்துடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்! திமுக வேட்பாளர். சி.வெ. கணேசன்!!

கடலூர் மாவட்டம், திட்டக்குடி தனித் தொகுதிக்குட்பட்ட பெண்ணாடம் பேரூராட்சியில் தேர்தல் சூழல் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு வார்டு பகுதிகளில் திமுக வேட்பாளர் சி.வெ. கணேசன் அதிரடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு, அரசியல் களத்தை சூடுபடுத்தியுள்ளார்.

மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் முழு ஆதரவுடன் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில், பொதுமக்களை நேரடியாக சந்தித்து, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கோரிய அவர், ஒவ்வொரு பகுதியிலும் உற்சாக வரவேற்பைப் பெற்றார்.

குறிப்பாக, பெண்ணாடம் பகுதியில் உள்ள ஜீம்-ஆ பள்ளிவாசலுக்கு சென்று அங்குள்ள மக்களிடம் நேரடியாக ஆதரவை கோரியது அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

இந்த வாக்கு சேகரிப்பில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் திரளாக கலந்து கொண்டு, பிரச்சாரத்திற்கு வலு சேர்த்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!