குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் குடியாத்தம் சட்டமன்ற வேட்பாளர். தபிதாள் அவர்களை ஆதரித்து வி .கே .சசிகலா தேர்தல் பரப்புரை!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் குடியாத்தம் சட்டமன்ற வேட்பாளர். தபிதாள் அவர்களை ஆதரித்து வி .கே .சசிகலா தேர்தல் பரப்புரை செய்தார்.
இதில் பா.ம.க.ராமதாஸ் அய்யா மாவட்ட செயலாளர். செந்தில்குமார் , சசிகலா கட்சி நிர்வாகிகள். அப்பு, பால் பாலாஜி, கருப்பு செல்வம், சூலை மணி, சந்தோஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் அவர் பேசும்போது, குடியாத்தத்தில் 2006 இல் ஜெயலலிதா அம்மா அவர்கள் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நான் ஆட்சிக்கு வந்தால் வழங்குவேன் என்று அறிவித்ததை சசிகலா அவர்கள் நினைவு கூறினார்.
மேலும் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினர்ருக்கு ஆறுதல் தெரிவித்தவர், வருங்காலத்தில் பட்டாசு விபத்துகளை தவிர்க்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது என்று வலியுறுத்தினார்.
மேலும் குடியாத்தத்தில் விரைவில் கைத்தறி பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் பத்தலபள்ளி அணையை விரைவில் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குடியாத்தத்தில் அரசு மகளிர் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுப்போம் .நிறைவேற்றாத வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் கூறி வருகிறார்கள். அதுபோல் நாங்கள் சொல்ல மாட்டோம் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை மட்டும் சொல்லுவோம் .வரும் 23 .4.2026 அன்று தென்னந்தோப்பு சின்னத்திற்கு வாக்களித்து தபிதாள் அவர்களை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார் .
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக