மாற்று திறனாளிகளுக்கு விளையாட்டு அணிகலன்கள் அளித்த ஸ்டார் குருசாமி!!
மதுரை : ஸ்டார் குருசாமி அவர்களுக்கு எங்கள் பணிவான வணக்கங்களை தெரிவித்துக் கொள்கின்றோம் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு 50 நபர்களுக்கு விளையாட்டு ஷூ கொடுத்து சிறப்பு செய்தீர்கள் 20 பயிற்சியாளர்களுக்கு விளையாட்டு அணிகலன்கள் கொடுத்து சிறப்பு செய்தீர்கள். கோடை காலத்தை முன்னிட்டு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளும் 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு நல்ல குடிநீர் வாரம் தோறும் 2000 லிட்டர் வழங்கி சிறப்பித்து உள்ளீர்கள்
இந்த முப்பெரும் நலத்திட்டங்களை எங்களுக்கு வழங்கி சிறப்பித்த நட்சத்திர நண்பர் அறக்கட்டளை நிர்வாக மேலாளர் மற்றும் ஸ்டார் குரூப் ஆப் கம்பெனிஸ் நிர்வாக மேலாளர் மரியாதைக்குரிய கருணை உள்ளம் கொண்ட தர்மம் தலைகாக்கும் என்று தன் உள்ளத்தில் எப்போதும் வைத்துக்கொண்டு எண்ணற்றவர்களுக்கு பசியாற்றும் கொடை வள்ளலே குருசாமி அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என மாற்று திறனாளிகள் சார்பில் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக