எனதிரிமங்கலம் திரௌபதையம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் எனதிரிமங்கலம், கீழ்காவனூர் கிராம திரௌபதையம்மன் கோயிலில் அக்னி மகோற்சவ பெருவிழா நடைபெற்றது. கடந்த 22 ம் தேதி துவாஜாரோகணம் துவங்கிய விழா நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்ற சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தது.கடந்த 7 ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம், அதனைத் தொடர்ந்து மாடுபிடி சண்டை, கோட்டை இடித்தல், வாண வேடிக்கை, முத்து பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் வேண்டுதல்களுக்காக தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். எனதிரிமங்கலம், கீழ்காவனூர் ஊர் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடலூர் செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக