தேர்தல் பிரச்சாரத்தில் தலைவர்களின் சூடான பேச்சு!!
மு.க.ஸ்டாலின்: இனிமேலாவது தமிழ்நாட்டை உரசி பார்க்காதீர்கள்; தாங்க மாட்டீர்கள்; தேர்தலுக்கு முன் மோடிக்கு மாபெரும் தோல்வி. உயிரே போனாலும் உரிமைகளுக்காக போராட நான் ரெடி.
எடப்பாடி பழனிசாமி:அம்மா உணவகத்தில் உணவின் தரம் குறைவாக இருப்பதாக என்னிடம் புகார் வந்துள்ளது; அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ருசியான, சுவையான உணவு அம்மா உணவகத்தில் வழங்கப்படும்; அம்மா உணவகம் இனிமேல் முதலமைச்சரின் நேரடி பார்வையில் இருக்கும்.
செங்கோட்டையன் அமைச்சராக இருந்தபோது அவரது மனைவி, மகன் தலைமைச் செயலகம் வந்து ஜெயலலிதாவிடம் புகார் அளித்தனர். அந்த கேவலமான புகாரை சொல்வது என் பதவிக்கு சரியாக இருக்காது. இப்படிப்பட்ட ஆளை கட்சியில் வைத்திருப்பதே தவறு என்று ஜெயலலிதா என்னிடம் கூறினார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக