நத்தம் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்!!


நத்தம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீ தடுப்பு குறித்து  நடந்த விழிப்புணர்வு முகாமில் செயல்விளக்கம் செய்து ஒத்திகை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம்,  நத்தம் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. இதற்கு தலைமை மருத்துவ அலுவலர் சின்ன இளங்கான், மருத்துவ அலுவலர்கள் நிஜந்தன், பூஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நத்தம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிகள் துறை சார்பில் நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் தலைமையில் 5 வீரர்கள் கொண்ட குழுவினர் தீ தடுப்பு குறித்தும், தீப்பற்றிய நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற் கொள்வது, அவற்றை பரவாமல் தடுக்கும் யுக்திகள் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டினர். மேலும் தீ தடுப்பு ஒத்திகையை நடத்திக் காட்டினர். இதில் அரசு மருத்துவமனை செவிலியர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், மருந்தாளுநர் மற்றும் பணியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

படவிளக்கம்: நத்தம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீ தடுப்பு குறித்து  நடந்த விழிப்புணர்வு முகாமில் செயல்விளக்கம் செய்து ஒத்திகை செய்து காண்பித்தனர்.

திண்டுக்கல் செய்தியாளர் நத்தம் மதுரை வீரன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!