திண்டுக்கல்லில் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்ட சார்பு ஆய்வாளர் கலையரசன்!!
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கலையரசன் பழனி பைபாஸ் சாலையில் 10 ஆயிரம் பணம் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ய முயன்ற போது சார்பு ஆய்வாளர் கலையரசன் கண்ணாடியால் தனக்குத்தானே குத்திய போது லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜன் தடுத்தார். அப்போது டிஎஸ்பி நாகராஜனுக்கு காயம் ஏற்பட்டது.பார் நடத்துவதற்கு மாதம் மாதம் 10 ஆயிரம் கொடுக்க வலியுறுத்தி சுகுமார் என்பவர் புகார் தற்கொலைக்கு முயன்ற சார்பு ஆய்வாளர் கலையரசன் லஞ்ச ஒழிப்பு DSP.நாகராஜன் தலைமையிலான போலீசார் சார்பு ஆய்வாளர் கலையரசன் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டார்.இதனைத் தொடர்ந்து பிடிபட்ட பழனி பைபாஸ் பகுதியில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பு ஆய்வாளர் கலையரசனை தாலுகா காவல் நிலையம் அழைத்து வந்தனர்.அங்கு சார்பு ஆய்வாளர் கலையரசன் தாலுகா காவல் நிலையத்தில் பாட்டிலை உடைத்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.உடனடியாக லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி.நாகராஜ் பாட்டிலை பிடுங்க முயற்சி செய்தபோது இருவருக்கும் காயம் ஏற்பட்டது.மருத்துவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி


கருத்துகள்
கருத்துரையிடுக