ஒரத்தூர் சிஎஸ்ஐ தூய பேதுரு ஆலயத்தில் உயிர்த்தெழுத்த திருநாள் பண்டிகை கொண்டாட்டம்!!
விழுப்புரம் மாவட்ட முழுவதும் கிறிஸ்தவ தேவ ஆலயங்களில் உயிர்த்தெழுந்த திருநாள் பண்டிகை கொண்டாடப்பட்டது ஏராளமான கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
உலகமெங்கும் கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகள் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை என்னும் உயிர்த்தெழுத திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது எனவே அதனை ஒட்டி விழுப்புரம் மாவட்டம் சி எஸ் ஐ தூய பேதுரு ஆலயம் ஒரத்தூர் திருச்சபையில் அதிகாலையில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளை முன்னிட்டு சிறப்பு கூட்டு ஆராதனை நடைபெற்றது இந்த ஆராதனையில் ஆயர் சாமுவேல் ஞானதாஸ் கலந்துகொண்டு இறை செய்தியை வழங்கி திருச்சபையின் விசுவாசிகளுக்கு திரு விருந்து அளித்து புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் புதிதாக திருச்சபை இணைத்துக் வந்தவர்களுக்கும் பெயர் சூட்டி ஞானஸ்நானம் கொடுத்தார் அதனைத் தொடர்ந்து இந்திய திருநாட்டிற்காகவும் தமிழகத்திற்காகவும் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காகவும் நடைபெற்று வரும் போர் நிறுத்தத்திற்காகவும் சிறப்பு மன்றாட்டை ஏறெடுத்தார் இதேபோன்று விழுப்புரம் மாவட்டம் முழுவதும் முண்டியம்பாக்கம் விக்கிரவாண்டி பெரியதச்சூர் முட்டத்தூர் நேமூர் கக்கனூர் நரசிங்கனூர் நாகந்தோர் முகையூர் செஞ்சி திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளிலும் உயிர்த்தெழுதல் சிறப்பு ஆராதனை நடைபெற்றது இந்த நிகழ்வில் செயலர் சேகர் பொருளாளர் சாமி தாஸ் சபையின் மூப்பர்கள் ஜான் பீட்டர் ,பாபு அறிவன் இயேசு சற்குரு தாஸ் மாணிக்கவேலு மோகன் ,எஸ்தர் ராணி ,பிரேமா ,விரோணிக்கா ,பியூலா, ஜெசி நிர்மலா, உள்ளிட்ட சபை மூப்பர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட சிறப்பு செயலாளர் டாக்டர் நடராஜன்.

கருத்துகள்
கருத்துரையிடுக