திருமயம் தொகுதி திமுக வேட்பாளர். ரகுபதி அரிமளம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு!!
புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் தொகுதி அரிமளம் வடக்கு ஒன்றியம் செட்டி பிச்சம்பட்டி, இந்திரா காலனி, கோவிந்தம்பட்டி, வலையம்பட்டி, வடக்கு நல்லிபட்டி, செபஸ்தியார்புரம், கடையக்குடி, வன்னியம்பட்டி, பாலம்பட்டி, நெய்வாசல்பட்டி, கூத்தம்பட்டி, வடக்குப்படி , மறமடக்கி உள்ளிட்ட34 கிராமங்களில் திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் ரகுபதி வாக்கு சேகரித்தார். அனைத்து பகுதிகளிலும் வாக்காளர்கள் ஆரத்தி எடுத்து , மாலை அணிவித்து வர வேற்றனர். இந்திரா காலனி பகுதியில் உள்ள குறவர் காலனி வாக்காளர்கள் வேட்பாளருக்கு பாசிமணிமாலை அணிவித்தனர். அமைச்சர் ரகுபதி பேசுகையில் குறிப்பிட்டதாவது. மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் . திருமயம் அரசு மருத்துவமனை ரூ 10 கோடியில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமயத்தில் சார்பு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், நடுவர் நீதிமன்றங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. பொன்னமராவதியில் சார்பு நீதிமன்றம் கொண்டுவரப்பட்டுள்ளன. திருமயம், பொன்னமராவதியில் மின்மயானம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது தமிழக முதல்வர் மகளிர் உரிமைத்தொகையாக கோடைகால சிறப்பு உதவிதொகையாக ரூ5 ஆயிரமாக தமிழக முதல்வர் வழங்கி உள்ளார். இந்தப் பகுதியில் தேவையான அளவில் சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வருகிற 23 ந்தேதியன்று வாக்குப் பதிவு எந்திரத்திரத்தில்முதல் பட்டனை அழுத்தி உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏதாவது பணிகள் விடுபட் டுஇருந்தால் விடுபட்ட பணிகளை செய்து தர தயாராக உள்ளேன் என்றார்.
தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் பொன்.ராமலிங்கம், இளையராஜா, முன்னால் ஒன்றிய தலைவர் மேகலா முத்து, காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்புராம், வட்டார தலைவர் அர்ச்சுணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் திலிபன் ராஜா, வழக்கறிஞர் தாஞ்சூர் கருப்பையாமற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கொண்டர்கள் கலந்துகொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக