தொழுதூர் டாஸ்மாக் கடைகளில் அரசியல் ஆதரவில் கொள்ளை அதிகாரிகள் மௌனம்! நடக்கும் டாஸ்மாக் துஷ்பிரயோகம்? தீவிர குற்றச்சாட்டு!!


கடலூர் மாவட்டம் தொழுதூர் ஊராட்சி எல்லைக்குட்பட்ட டாஸ்மாக் கடை எண் 2645 மற்றும் தொழுதூர் பகுதியில் செயல்படும் பிற டாஸ்மாக் கடைகளில் மேலாளர்கள், சூப்பர்வைசர்கள் மற்றும் ஒரு அரசியல் கட்சி பிரமுகர் தலையீடு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.அரசு நிர்ணயித்த விலையை மீறி, ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் ரூ.15 முதல் ரூ.20 வரை கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து மது வாங்கும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியபோது, “இதற்கு எனக்கு ஒன்றும் தெரியாது; சூப்பர்வைசரும் மண்டல மேலாளரும் தான் பொறுப்பு” என கடை மேலாளர் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், இந்த முறைகேடுகளில் அரசியல் ஆதரவு இருப்பதாக கூறப்படுவது பொதுமக்களிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தினசரி மக்கள் எதிர்கொள்ளும் இந்த வெளிப்படை கூடுதல் வசூல் குறித்து நடவடிக்கை எடுக்காதது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.இதனால், தொழுதூர் பகுதி பொதுமக்களும் மது பிரியர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த முறைகேடுகளை தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்குமா? சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நேரடி ஆய்வு மேற்கொண்டு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!