புவனகிரி அருகே கீரப்பாளையத்தில் நடைபெற்ற உலக ஹோமியோபதி தினம்!!

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே கீரப்பாளையம் பகுதியில், மெய் ஞான அறக்கட்டளை மற்றும் பி.என். ஆயிஷா கேர் இணைந்து உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு விழா நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் பல மருத்துவர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு ஹோமியோபதி மருத்துவத்தின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியின் போது, ஹோமியோபதி தொடர்பான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், கேள்வி–பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் சிறந்த கேள்விகளை கேட்டவர்களுக்கு ஹோமியோபதி மருத்துவ கிட்கள் பரிசாக வழங்கப்பட்டன.

மெய் ஞான அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர். ஞானசுந்தர பாண்டியன் தொடக்க உரையாற்றினார். தொடர்ந்து துணைத் தலைவர். சிபி. சுதாகர், பொதுச் செயலாளர். ஜெய ஜோதி, பிரகாஷ் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேலும், புதுவை மக்கள் மருத்துவர். கனக திருமேனி, டாக்டர் குபேரன், டாக்டர். அட்சயா, டாக்டர் சாய் மணிமொழி, டாக்டர் எம். அக்ஷயா ஆகியோர் பொதுமக்களிடம் ஹோமியோபதி குறித்து சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியின் இறுதியில் வேத இளவரசன் நன்றியுரை வழங்கினார். இதில் மெய்ஞானகுடில் தெரபிஸ்டுகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

புவனகிரி செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!