திருவண்ணாமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற சித்ரா பௌர்ணமி கிரிவல நேரத்தை அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது!!
திருவண்ணாமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற சித்ரா பௌர்ணமி கிரிவல நேரத்தை அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் 30.04.2026 (வியாழக்கிழமை) இரவு 9:52 மணிக்கு பௌர்ணமி திதி தொடங்குகிறது. மறுநாள் 01.05.2026 (வெள்ளிக்கிழமை) இரவு 11:08 மணி வரை பௌர்ணமி நீடிக்கிறது. பௌர்ணமி தொடங்கும் வியாழன் இரவு முதல் வெள்ளி இரவு வரை பக்தர்கள் கிரிவலம் செல்லலாம்.லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக