அரக்கோணம் அதிமுக வேட்பாளர் ரவி தலைமையில் முகவர்கள் ஆலோசனை கூட்டம்!!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று வியாழன் கிழமை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது இதில் அதிமுக சார்பில் பணியாற்றும் முகவர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்கிற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு அதிமுக வேட்பாளர் சு ரவி தலைமையேற்று பேசிய போது கடந்த 20 நாட்களுக்கு மேலாக கடும் வெயிலில் தீவிர வாக்கு சேகரிப்பின் போது என்னுடன் அனைவரும் பணியாற்றினீர்கள் அதேபோன்று வாக்குப்பதிவு அன்றும் அனைவரும் முகவர்களும் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் இதற்காக முகவர்கள் காலை 5:30 மணி அளவில் வாக்குப்பதிவு இடங்களுக்கு சென்று விட வேண்டும் ஒவ்வொரு வாக்கும் தவறவிடாமல் பதிவு செய்ய வாக்காளர்களுக்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள் ஐம்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் நாம் ஜெயிக்க வேண்டும் முதல்வராக எடப்பாடி யார் வரவேண்டும் என பேசினார் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் அதிமுக பிரகாஷ் பழனி பாஜக பார்த்தசாரதி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாகராஜன் மாவட்ட கழக துணை செயலாளர் மீனா ரகுபதி ஆகியோர் முன்னிலை வைத்தனர் கூட்டத்தில் திரளான கூட்டணி கட்சியினர் முகவர்கள் கலந்து கொண்டனர் வழக்கறிஞர் தனஞ்செழியன் நன்றி கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக