அரக்கோணம் தசா பூஜா பத்ர காளியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற யாகம் மற்றும் அன்னதானம்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் நகரில் அருள்மிகு தசா பூஜா பத்ரகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது இங்கு திருமணம் ஆகாதவர்களுக் காகவும் தோஷங்கள் நீங்கவும் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபம் அடையவும் பவுர்ணமி தோறும் யாகம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது இந்த வாரம் பங்குனி பவுர்ணமி இன்று சந்த் மகாசபா தமிழ்நாடு மாநிலத் தலைவர் சுவாமி ஸ்ரீராம் சித்திரகுப்தஜி மஹராஜ் நல்லாசியுடன் பவுர்ணமி யாகம் அன்னதானம் நடைபெற்றது
சந்த் மகாசபா வின்
அரக்கோணம் நகர செயலாளர் பூஜாரி மணிவாசகன் நகர மகளிரணி தலைவி ராஜேஸ்வரி ஆகியோர் விழா ஏற்பாடு செய்தனர் சிறப்பு அழைப்பாளராக மு. நகர மன்ற உறுப்பினர் சரவணன் கலந்து கொண்டு சிறப்பு செய்தார் விழா ஏற்பாடுகளில் பூசாரிகள் சத்யா மகேஷ் மணிகுருக்கள் ஈடுபட்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக