நல்லூர் ஒன்றியத்தில் எழுந்த மக்கள் அலை – திமுகக்கு பெரும் ஆதரவு!!
கடலூர் மாவட்டம், திட்டக்குடி தனி தொகுதிக்குட்பட்ட நல்லூர் ஒன்றிய பல்வேறு ஊராட்சி பகுதிகளில், மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் திமுக வேட்பாளர் சி.வெ.கணேசன் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கொத்தட்டை ஊராட்சியில் அவருக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் மாலை அணிவித்து உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
இந்நிகழ்வில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக