வேலூர் டிரினிட்டி பள்ளியில் பள்ளி தாளாளர் கேப்டன் பிரசாத் குமார் தலைமையில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழா!!
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு DNET கல்வி நிறுவனங்களின் கீழ் பல்லலகுப்பம் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி , பேரணாம்பட்டு செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி , பள்ளிகொண்டா அகரம் மெட்ரிகுலேஷன் பள்ளி , பேரணாம்பட்டு நாயகி நர்சிங் பள்ளி , பேரணாம்பட்டு நீட் பயிற்சி மையம் ஆகியவை இயங்கி வருகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த 2024 - 25ஆம் கல்வி ஆண்டு முதல் வேலூர் டிரினிட்டி பள்ளியை , DNET கல்வி நிறுவனம் வாங்கியது .அதன்படி நேற்று வேலூர் டிரினிட்டி பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
இதற்கு DNET கல்வி நிறுவனங்களின் தலைவரும் , தேவநாயகி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் , பள்ளித் தாளாருமான கேப்டன் பிரசாத் குமார் தலைமை தாங்கினார். அறக்கட்டளை அறங்காவலர்கள் ஆசிரியை ரங்கநாயகி முன்னிலை வகித்தார். டாக்டர் நவீன் தேவப்பிரியன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக மூத்த வழக்கறிஞர் கே எம் பூபதி , ஆடிட்டர் மனோகரன் , ஆகியோர் பங்கேற்று போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ்கள் வழங்கி பேசினார்கள் இதன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் மணிகண்டன் , தலைமை ஆசிரியர் கிரேஸ் அண்ண பாக்கியம் , ஆசிரியர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்
இதில் மாணவர்களின் விழிப்புணர்வு நடன மற்றும் நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் எண்ணூர் துறைமுக முதன்மை மேலாளர் கேப்டன் மகேஸ்வரன் , ஹாங்காங் கப்பல் துறை கேப்டன் சரவணன் , தென்னக ரயில்வே வணிக கண்காணிப்பாளர் பர்குணன் , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கண்காணிப்பு குழு உறுப்பினர் லாவண்யா தினேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சி இறுதியில் அறக்கட்டளை இயக்குநர் நரேந்திர குமார் நன்றி தெரிவித்தார்.
பட விளக்கம் : வேலூர் டிரினிட்டி பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது - பள்ளி தாளாளர் கேப்டன் பிரசாத் குமார் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பாக அழைப்பாளராக வழக்கறிஞர் கே எம் பூபதி , ஆடிட்டர் மனோகரன்.
குடியாத்தம் செய்தியாளர் கே. வி ராஜேந்திரன்

கருத்துகள்
கருத்துரையிடுக