பங்குனி உத்திர திரு விழா!!
ராணிப்பேட்டை மாவட்டம்,வன்னிய குல ஷத்திரிய வம்சத்தின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில்,
ஸ்ரீ ஜம்பு மகரிஷி யாகத்தில் ஸ்ரீ உருத்திர வன்னியர் அவதரித்த பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு, சிறப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில்,
சிறப்பு யாக பூஜை, பூணூல் தரித்தல் நிகழ்ச்சி,புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல்,மேலும் ஸ்ரீ ஜம்பு மகரிஷி திருக்கோவில் கட்டுதல், ஜம்பு மகரிஷி ஸ்டிக்கர் வெளியிடுதல் ஆகியவை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி இன்று காலை 9.00 மணிக்கு வள்ளி மலையில் அமைந்துள்ள ஜம்பு மகரிஷி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
வன்னிய குல ஷத்திரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அருளாசி பெற்றனர் இவ்விழா ஏற்பாட்டினை அமைப்பின் நிறுவனர் வன்னியஜோதி (எ) K. கெங்காதர நாயகர் ஏற்பாடு செய்து இருந்தார். முடிவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக