அரக்கோணத்தில் நடைபெற்ற அய்யா பாமக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் சூடு பிடிக்க தொடங்கிவிட்டன அதன் ஒரு பகுதியாக அரக்கோணம் நகரிலும் அனைத்து கட்சிகளின் தேர்தல் பணிகளும் சூடு பிடிக்க தொடங்கிவிட்டன இந்த நிலையில் அய்யா பாமக சார்பில் அரக்கோணம் மற்றும் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த மாவட்ட செயலாளர் லோகநாதன் தலைமை தாங்கி வழிநடத்தினார் வழக்கறிஞர் லோகேஷ் கூட்டத்தினை ஒருங்கிணைத்தார் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் பஞ்சாட்சரம் கிருஷ்ணன் இரா. சுப்ரமணி மின்னாளன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்து பேசினார்கள் கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் லோகநாதன் பேசிய போது பாட்டாளி சொந்தங்களின் வாழ்க்கையில் ஒளியேற்றியவர் மருத்துவர் ஐயா அவர் காட்டும் பாதையில் உண்மையாக பயணிப்பது என்பது சிறந்ததாகும் எத்தனையோ பேர் விலகிச் சென்றாலும் ஐயாவின் தலைமையில் ஒற்றுமையுடன் செயல்படுவோம் நமக்கு அளிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் வெற்றி பெற ஒவ்வொரு நிர்வாகிகளும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் பணம் என்பது பெரிதல்ல நம்முடைய கொள்கைகளே உண்மையானது என்று பேசினார் மாவட்ட பொருளாளர். சித்ரா நன்றி கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக