ராணிப்பேட்டை நகரத்தில் உதய சூரியன் சின்னத்திற்கு அமைச்சர் வாக்கு சேகரிப்பு!!
ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் ஆர் காந்தி 1,வது வார்டு முதல் 7, வார்டு வரையும் 13-வது வார்டு முதல் 20 ஆவது வார்டு வரை உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவருக்கு பட்டாசு வெடித்து பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்பொழுது அமைச்சர் ஆர் காந்தி பேசியதாவது.திமுக வேட்பாளராக நான் ஏழாவது முறையாக போட்டியிடுகிறேன். உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகளை அளித்து அதிகமான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்.உங்கள் பகுதிகளில் சாலை வசதி கால்வாய் வசதி நியாய விலை கடைகள் அங்கன்வாடி கட்டிடம் என மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நான் செய்து கொடுத்து இருக்கிறேன். தேர்தலில் நான் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு தான் மீண்டும் வாக்குகளை கேட்க வந்துள்ளேன் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் விடியல் பயணத் திட்டத்திற்கு முதலில் முதல்வர் கையெழுத்துயிட்டார் மகளிர் உரிமைத் தொகை போன்று பெண்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை செய்துள்ளார். அடுத்து திமுக ஆட்சி அமைந்ததும் மகளிர் உரிமை தொகை ரூ.2000 வழங்க உள்ளோம் . மக்களுக்கு எங்கு அடிப்படை வசதிகள் தேவையோ அதை கட்சி பேதம் இன்றி செய்து இருக்கிறோம் இதுதான் மக்களாட்சி இவ்வாறு பேசினார். இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, நகர மன்ற உறுப்பினர்கள் வினோத் முத்தழகன், இப்ராகிம் நசீமா, பிரபாகரன் ஜெயந்தி அம்பிகா அர்ஜுனன் பக்த குமார் தென்றல் மஞ்சுளா, குமார் கோபி கிருஷ்ணா பிரபாகரன் உட்பட கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்

கருத்துகள்
கருத்துரையிடுக