சாத்தூரில் வேட்பாளர் இசக்கி ராஜாவை ஆதரித்து: நடிகர் கார்த்திக் தீவிர பிரச்சாரம் என் தம்பி வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்ல வேண்டும் கார்த்திக் எழுச்சி உரை!!
சாத்தூர் தொகுதியில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடும் இசக்கி ராஜா தேவருக்கு ஆதரவாக பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், நவரச நாயகன் கார்த்திக் நேரில் வந்து உற்சாகமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.பிரச்சார நிகழ்வில், “வெத்தல போட்ட சோக்குல” என்ற பிரபலமான பாடலை பாடி கூட்டத்தினரின் உற்சாகத்தை தூண்டிய கார்த்திக், தனது எழுச்சி உரையில், “என்னுடைய தம்பி, நம்முடைய தம்பி உங்களோடு இருந்து உங்களுக்காகவே வாழ்கிறவர் இசக்கி ராஜா தேவர். இவர் வெற்றி பெறாமல் வேறு யார் வெற்றி பெறுவார்? இவரை சட்டமன்றத்திற்கு அனுப்பியே ஆக வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மேலும் அவர் உணர்ச்சி வசப்பட்டு பேசுகையில், “பதவிக்காக வருபவன் அல்ல என் தம்பி. சாத்தூர் மக்களின் உரிமைக்காக உயிரையும் கொடுக்கும் உண்மையான தலைவன்!” என்று கூறியபோது, மேடையே பரபரப்பாகக் குலுங்கியது.கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் கைகொட்டலால் ஆதரவு தெரிவித்தனர்.அதேவேளை, சமீபத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், மௌன அஞ்சலி கடைப்பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வேட்பாளர் இசக்கி ராஜா தேவர் தனது உரையில் உற்சாகமாக பேசினார். “உயிருக்கு மேலாக நேசிக்கும் பாண்டி நாட்டு தங்கம் அண்ணன் அமரன் இருக்கிறார். பாஜகவின் எத்தனை மந்திரிகள் வந்தாலும் எங்களை அசைக்க முடியாது. நிச்சயம் மக்கள் சக்தியே வெல்லும்,” என்று கூறினார்.மேலும் சின்னம்மா அவர்களை அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போம் சாத்தூர் களம் இதற்குத் தயாராக உள்ளது!” எனக் கூறி தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தினார்.இந்த பிரச்சாரம் சாத்தூர் தொகுதியில் தேர்தல் சூட்டை அதிகரித்துள்ளதுடன், அரசியல் போட்டி கடுமையாக மாறியிருப்பதற்கான சைகையையும் வெளிப்படுத்துகிறது.பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள இந்த ஆர்வம், வரவிருக்கும் தேர்தலில் வாக்கு சதவீதத்தையும் தீர்மானிக்கக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக