உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற சித்திரைத் திருவிழா!!
மதுரை மாவட்டம், மதுரை: இன்று (ஏப்ரல் 19) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
சுவாமி சந்நிதி முன்பாக உள்ள தங்கக் கொடிமரத்தில், காலை 10:35 மணி முதல் 10:59 மணிக்குள் மிதுன லக்னத்தில் வேத மந்திரங்கள் முழங்க அதிகாரப்பூர்வமாகக் கொடி ஏற்றப்பட்டது.
இந்த விழாவைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலில் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். இனி வரும் 12 நாட்களுக்கு மதுரையே விழாக்கோலம் பூண்டிருக்கும்; தினமும் காலை, மாலை என இருவேளைகளும் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனங்களில் மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் ஏப்ரல் 26-ஆம் தேதியும், திருக்கல்யாணம் ஏப்ரல் 28-ஆம் தேதியும், தேரோட்டம் ஏப்ரல் 29-ஆம் தேதியும் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து, மே 1-ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் சிகர நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.




கருத்துகள்
கருத்துரையிடுக