தர்மபுரியில் நடைபெற்ற விடுதி காப்பாளர்கள் பணி நிறைவு பாராட்டு விழா!!
தர்மபுரி காப்பாளர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில், தருமபுரி கல்லூரி விடுதி காப்பாளர் எல். ஞானவேல் மற்றும் நரிப்பள்ளி பள்ளி விடுதி காப்பாளினி எம்.ஜி. ஜெயந்தி ஆகியோரின் பணி நிறைவு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் தர்மபுரி மாவட்ட தலைவர் குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பணி நிறைவு பெறும் இருவரின் நீண்டகால சேவையை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்.மேலும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து காப்பாளர்கள், காப்பாளினிகள், விடுதி பணியாளர்கள் சங்க உறுப்பினர்கள், விடுதி தூய்மைப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் காப்பாளர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.இந்த நிகழ்வின் போது சங்க மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக