ஆவுடையார் கோவில் தாலுகாவில்இருப்பாடு மண் எடுக்கலாம் என்று தமிழக அரசும் அறிவித்து இருந்த நிலையில் தற்போது தேர்தல் நேரத்திலும் அந்த மண்ணடிப்பவர்கள் ஏரியிலிருந்து பல கிலோமீட்டர் தூரம் சாலையில் மண் கொண்டு செல்கின்றனர்டிராக்டரில் கொண்டு செல்லும்போதுபின்னால் உள்ள கதவுகளை அடைக்காமல் அப்படியே செல்வதால் ட்ராக்டர் டிப்பரில் உள்ள கற்கள் சாலையில் பட்டு இரு சக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள் மீது விழுவதால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது இதே போல் ஆவுடையார் கோவில் கடைவீதி புண்ணியவயல் மங்களம் ,கரூர் திருப்புனவாசல் கதிராமங்கலம் ஊராட்சி பொன் பேத்தி போன்ற ஊர்களில் இவர்களின் அட்டகாசம் தாங்கவில்லை என்று பள்ளி மாணவ மாணவிகள் கூறுகின்றனர் தற்பொழுது பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேர்வு நடந்து கொண்டுள்ளது காலையில் அவர்கள் தமிழக அரசால் கொடுத்துள்ள மிதி வண்டியில்பள்ளிக்கு வரும்போது அவர்கள் அருகில் செல்லும் டிராக்டரில் இருந்து கற்கள் சாலையில் விடுவதால் அவர்கள் அச்சத்துடன் தேர்வு எழுத வருவதாக கூறுகின்றனர் இது சம்பந்தமாக வருவாய்த்துறையினரும் காவல்துறையினரும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அப்பகுதியில் உள்ள மாணவ மாணவிகள் கூறுகின்றனர்.
புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்
கருத்துரையிடுக