பண்ருட்டி அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி நிறைவு பாராட்டு விழா!!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சித்திரா ஜெயந்தி, பட்டதாரி ஆசிரியர் அண்ணாமலை பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர். திருமால்வளவன் வரவேற்று தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள். பாபு, ஹேமலதா , மாலதி
ஒய்வு பெற்ற ஆசிரியர்களின் சேவைகளை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்கள்.
முடிவில் பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் ராஜா நன்றி கூறினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக