ஒட்டுமொத்த அமைப்பின் தோல்வி" விபத்தல்ல, அமைப்பின் தோல்வி!!


ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்திருப்பது வெறும் விபத்தல்ல. அது ஒட்டுமொத்த அரசு மற்றும் தணிக்கை அமைப்பின் தோல்வியால் விளைந்ததாகும். காலத்தே எடுக்கப்படாத நடவடிக்கை: தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) வழங்குவதில் ஏற்பட்ட அளவுக்கு அதிகமான காலதாமதமே, திருட்டுத்தனமாக படம் வெளியாவதற்கான (Piracy) சூழலை உருவாக்கியுள்ளது. உரிய நடைமுறைகள் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது.திருட்டுப் பிரதி (Piracy) என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. இது நூற்றுக்கணக்கான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களின் உழைப்பையும், நேர்மையாக வரி செலுத்தும் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் முதலீட்டையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது.

அமைப்பு தோல்வியடையும் போது படைப்பாளியை யார் பாதுகாப்பது?' விரைவான தணிக்கை சான்றிதழ் வழங்குதல் மற்றும் கடுமையான சட்ட அமலாக்கம் தேவை  சினிமா ஆர்வலர்கள் அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று சட்டப்பூர்வமாகப் படத்தைப் பார்க்க வேண்டும் நடிகர் கமல்ஹாசன் கண்டனம்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!