கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் கனிமொழி அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பளர் செங்கோட்டையன் தலைமையில் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம்!!


கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக தொழிலதிபர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டும் வருகிறார். இந்த நிலையில் இன்று கோவை வந்த தமிழக வெற்றிக் கழக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர் கனிமொழி சந்தோஷ், மேட்டுப்பாளையம் தொகுதி வேட்பாளர் சுனில் ஆனந்த் ஆகியோரை சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள கனிமொழி சந்தோஷ் அலுவலகத்தில் செங்கோட்டையன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதைத்தொடர்ந்து த வெ க கட்சித் தொண்டர்களிடம் உரையாற்றினார். அவர் பேசும்போது தீய சக்த்தியான திமுகாவை தமிழ்நாட்டில் இருந்து விரட்ட வேண்டும் என்பதுதான் மக்களுடைய ஆசை, இதை நிறைவேற்ற வேண்டும் என்றால் தமிழக வெற்றிக் கழக வேட்பாலர்களைத் தவிர யாரும் இல்லை என்றார். இந்நிகழ்ச்சியில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வி ராஜ்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!