உலக அமைதிக்கான நோபல் பரிசு மோடியைத் தவிர வேறு யாருக்கு? என்கிற பெயரில் ஆராய்ச்சி முன்மொழிவை வெளியிட்ட டாக்டர் ஆர் ஜி ஆனந்திற்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பாராட்டு!!


பாரத பிரதமர் நரேந்திர மோடி  பல்வேறு உலக நாடுகளுடன் உருவாக்கி வைத்துள்ள நட்புறவுகள்,அவரால் அறிமுகப் படுத்தப்பட்ட முன்மாதிரி மக்கள் நலத்திட்டங்கள், கொரானா பேரிடர் காலத்தில் உலக மக்களுக்காக அவர் மேற்கொண்ட அசாத்திய பணிகள், சர்வதேச அமைதிக்காக அவர் மேற்கொண்ட முன்னெடுப்புகள் ஆகியவற்றை விரிவாக விளக்கி IF NOT MOOI, WHO ELSE? THE ONE WHO DESERVES THE NOBEL PEACE PRIZE

உலக அமைதிக்கான நோபல் பரிசு மோடியைத் தவிர வேறு யாருக்கு ?என்கிற ஓர் ஆராய்ச்சி முன்மொழிவை முன்னாள் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர் ஜி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.உலகின் சிறந்த தலைவர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள பாரத பிரதமர் மோடியை பல்வேறு நாட்டின் அதிபர்கள் மற்றும் பிரதமர்கள்  பாராட்டி எழுதியுள்ள கடிதங்களை தனது ஆராய்ச்சி முன்மொழிவில் டாக்டர் ஆர் ஜி ஆனந்த் மேற்கோள்களாக பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவற்றை ஆய்வு செய்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் டாக்டர்  ஆர் ஜி ஆனந்திற்கு அனுப்பியுள்ள பாராட்டுக் கடிதத்தில் இத்தகைய சிறப்பான பணிகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அஜித் தோவலின் கடிதத்தை தொடர்ந்து புதுடெல்லியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அலுவலர்கள் டாக்டர்  ஆர் ஜி ஆனந்திற்கு நேரிலும் சமூக வலைதளங்களிலும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!