மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் நிகழ்ச்சி!!


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் "மீனாட்சி.. சொக்கநாதா.." என்ற பக்தி முழக்கத்துடன் மாசி வீதிகளில் திரண்டு நின்று வடம்பிடித்துத் தேரை இழுத்தனர். முதலில் விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் சிறிய சப்பரங்களில் முன்செல்ல, அதனைத் தொடர்ந்து பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரரும், மற்றொரு தேரில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.அழகிய மலர்களாலும், வண்ணத் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த மாட வீதிகள் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கடந்த 12 நாட்களாகத் திருக்கல்யாணம், பட்டாபிஷேகம் என களைகட்டிய சித்திரை திருவிழா, இந்தத் தேரோட்டத்துடன் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்தைக் காண ஒட்டுமொத்த மதுரையே ஆவலுடன் தயாராகி வருகிறது.


தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!