இந்திய அரசு எனது இளைய பாரதம் மற்றும் செஞ்சுரி லயன்ஸ் புதுக்கோட்டையில் நடத்திய சிலம்பம் மற்றும் தேக்வாண்டோ போட்டி!!
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இந்திய அரசு எனது இளைய பாரதம் மற்றும் செஞ்சுரி லயன்ஸ் புதுக்கோட்டை நடத்திய சிலம்பம் மற்றும் தேக்வாண்டோ போட்டிகளில் பல்வேறு பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். சிலம்பம் சேம்பியன் போட்டியில் மாணவர்கள் தமிழினியன், தானிஷ், வேல் அரவிந்த், சண்முகபாண்டியன், பிரதோஷ், அப்துல் சுபகான், தசரதன் லிகன்யா ஸ்ரீ ஆகியோர் தங்கப் பதக்கமும், ருத்தீஸ்வரன் வெள்ளிப்பதக்கமும், ஜெயமுகேஷ், சுனில் சிவாகர், சபரீஷ் ராஜன், சிபுதரன், ஆகியோர் வெண்கலப் பதக்கமும் பெற்றனர் தேக்வாண்டோ போட்டிகளில் பாதில், கயல்விழி, பரணி ஆகி;யோர் வெள்ளிப்பதக்கமும், முகமது ஆபித், ரித்திக், தேஸ்னா, ஷர்வின், தீர்த்தகன், விஜயதர்சினி, ஹிர்த்திக் ஹரிநிவாஸ் ஆகியோர் வெண்கலப் பதக்கமும் பெற்று சாதனை படைத்தனர்.
சிலம்பம் மற்றும் தேக்வாண்டோ போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களுடன் வந்த மாணவர்களுக்கு பள்ளியின் இயக்குனர் ரா.சுதர்சன் பரிசுகள் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக