திமுகதான் ஒரிஜினல்: முதல்வர் ஸ்டாலின்!!
திமுக திட்டங்களை பார்த்துதான், இன்றைக்கு பல்வேறு மாநிலங்கள் காப்பியடித்து கொண்டிருக்கிறார்கள். ஏன்? மத்திய அரசே காப்பியடித்து கொண்டிருக்கிறது. மக்களுக்கான முன்னோடி திட்டங்களை செயல்படுத்துவதில் திமுகதான் 'ஒஜி' (ஒரிஜினல்).திராவிட மாடல் 2-இல், எவ்வளவு உரிமைத் தொகை உயர்த்தப் போகிறோம்? இரட்டிப்பாக்கப் போகிறோம்! ரூ.2,000-மாக்க போகிறோம். அடுத்து விடியல் பயணம்; பெண்களுடைய பொருளாதாரச் சுதந்திரத்துக்கு அடிப்படையாக அமைந்திருக்கக்கூடிய புதிய புரட்சித் திட்டம் அது. வீட்டுக்குள்ளேயே பலர் முடங்கியிருக்கிற நிலையை உடைத்திருக்கிறோம். புதுக்கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக