நெமிலி அருகே எஸ். மணிவண்ணன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடியை ஏந்தி ஆர்ப்பாட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வடக்கு ஒன்றியம் சார்பாக மாவட்ட செயலாளரும் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சருமான ஆர். காந்தி அவர்களின் ஆலோசனையில் நெமிலி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர். டி. எஸ். மணிவண்ணன் அவர்கள் தலைமையில் மாவட்ட பிரதிநிதி மோகன்குமார் முன்னிலையில் கிளை செயலாளர்கள். விபி கோடீஸ்வரன் சிவகுமார் புருஷோத்தமன் டபிவி சங்கர் ஏகாம்பரம் பிரதிநிதிகள் கணபதிபிரபு மற்றும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தொகுதி மறு சீரமைப்பு அமைவதை சுட்டிக்காட்டி எதிர்த்து நெமிலி வடக்கு ஒன்றியம் மற்றும் திருமால்பூர் திமுக கழகத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக