நமணசமுத்திரம் காவல் துறை சார்பில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி!!
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர். அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில் பொன்னமராவதி உட்கோட்டம் நமணசமுத்திரம் காவல் நிலைய காவல்துறை சார்பாக தேர்தல் விழிப்புணர்வு பாதுகாப்பு பேரணி நடைபெற்றது.
பொன்னமராவதி.டி.எஸ்.பி சரவணன் தலைமையில் கொடி அசைத்து பேரணியை தொடங்கிவைத்தார். 100 போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியானது
கம்பன் செட்டிசத்திரம் பேருந்து நிறுத்தத்தில் ஆரம்பிக்கப்பட்டு மேலதேமுத்துப்பட்டி - இளங்குடிபட்டி - வழியாக நமணசமுத்திரம் கடைவீதியில் நிறைவு பெற்றது.மக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் பலமாக இருப்பதை தெரிவிக்கும் வகையில் இந்த பேரணி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக