சுகேஷ் சந்திரசேகருக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன்!!
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கே லஞ்சம் கொடுக்க முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில்!
இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு டெல்லி நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது.
7 ஆண்டுகால சிறைவாசத்திற்குப் பிறகு இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகளுக்கிடையே பிளவு ஏற்பட்டபோது, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.
அந்தச் சின்னத்தை டிடிவி தினகரன் தலைமையிலான அணிக்கு பெற்றுத் தருவதற்காக,
தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு சுமார் 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு சுகேஷ் சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்தது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக