கோவையில் கணவருடன் சேர்த்து கொண்டு அண்ணனின் பெட்ரோல் பங்கை அபகரிக்க முயற்சி செய்த, தங்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி அண்ணன் பரபரப்பு புகார் அளித்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!


கோவை சக்தி சாலை கடத்தூர் பிரிவில்  வெற்றி விநாயகர் ஏஜென்சிஸ் பாரத் பெட்ரோலியம் இயங்கி வருகிறது. இந்த பெட்ரோல் பங்க் இடத்தின் உரிமையாளரான மகேந்திர பிரபு என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பெட்ரோல் பங்கின் உரிமத்தை   தனது தங்கை யமுனா தேவியின் பெயரில்  வாங்கியுள்ளார். தற்சமயம் யமுனாவிற்கு திருமணம் ஆனவுடன் தனது கணவருடன் சேர்ந்து கொண்டு இந்த பெட்ரோல் பங்க் தன்னுடையது என்று அடியாட்களை வைத்து மிரட்டியுள்ளார்.


இதுகுறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில்  உரிமையாளரான மகேந்திர பிரபு புகார் அளித்துள்ளார். ஆனாலும் காவல்துறையினர் புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தனக்கு  நியாயம் கிடைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை மின்சார வாரியத்தில் இருந்து பணிகள் செய்வதற்காக பெட்ரோல் பங்கிற்கு மின்சாரத் துறையினர் வந்துள்ளனர் அதனை கண்டித்து மகேந்திர பிரபு அவருடைய தந்தை ஆகியோர் மின் இணைப்பு பணிகளை செய்யக்கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!