பாஜக தலைமை அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் முன்பே, தஞ்சாவூர் தொகுதியில் தன்னிச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்த அக்கட்சியின் நிர்வாகி முரளிதரன் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்!!



தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவராக இருந்த முரளிதரன், கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, அவரைத் தொடக்க கால உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிப்பதாகத் தமிழக பாஜக தலைமை அறிவித்துள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கட்சித் தலைமையின் முடிவுக்குக் காத்திருக்காமல் அவசரப்பட்டு வேட்புமனுத் தாக்கல் செய்த இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒழுங்கு நடவடிக்கையை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இதன் மூலம் கட்சித் தலைமை உறுதிப்படுத்தியுள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!