குடியாத்தம் அருகே வாலிபர் கத்தியால் குத்தி கொலை! போலீசார் விசாரணை குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்!!

வேலூர் மாவட்டம்,குடியாத்தம் அடுத்த பாக்கம் மதுரா கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் நந்தகோபால்  37 சென்னையில் கட்டிட மேஸ்திரி ஆக வேலை செய்து வருகிறார்

தேர்தல் என்பதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊரான பாக்கம் கிராமத்திற்கு வந்துள்ளார்

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பிரேம் என்பவர் நேற்று பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டு இருந்துள்ளார்

அப்பொழுது பிரேம் என்பவர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசாருக்கு அருகில் இருந்த பெட்டிக்கடையில் இருந்து ஜூஸ் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது அதில் மீதமுள்ள ஜூசை நந்தகோபால் மகன்களுக்கு கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நந்தகோபாலுக்கும் பிரேமுக்கும் முன்விரோத தகராறு இருந்துள்ளது இதனால் இருவருக்கும் வாய் தகராறு மற்றும் சண்டை ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த பிரேம் வீட்டிலிருந்து கத்தியை கொண்டு வந்து நந்த கோபாலின் வயிறு மற்றும் மார்பில் குத்தி கொலை செய்துள்ளார்.

பின்னர் போலீசார் நந்தகோபாலை மீட்டு குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக கூறி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டனர்

இது குறித்து தகவல் அறிந்த நந்தகோபாலின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பிரேமை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் தமிழகத்தில் இருந்த ஆந்திரா பக்கம் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு குடியாத்தம் வழியாகச் சென்ற லாரிகள் கார்கள் வேண்கள் சுமார் மூன்று கிலோ மீட்டருக்கு அணிவகுத்து நின்றது.

ஆயுதப்படை போலீசார் சாலை மறியலை கலைக்க முயற்சி செய்து முடியவில்லை மேலும் இது குறித்து பரதராமி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீஸ் விசாரணையில் நந்தகோபாலுக்கு திருமணம் ஆகி அருணா என்ற மனைவியும் 2 மகன்கள் உள்ளனர்   என தெரியவந்துள்ளது. மேலும் அதே போல் பிரேமுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளது தெரியவந்துள்ளது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!