பள்ளி நண்பரை கண்டவுடன் வாகனத்திலிருந்து இறங்கி நலம் விசாரித்த திமுக வேட்பாளர் சி.வெ. கணேசன்!!

கடலூர் மாவட்டம், திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சி.வெ. கணேசன் பாசார் ஊராட்சியில் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அதே ஊரைச் சேர்ந்த திமுகவின் தீவிர தொண்டரும், தனது பள்ளி நண்பருமான மருதமுத்துவை கண்டவுடன், பிரச்சார வாகனத்திலிருந்து இறங்கி சென்று அவரிடம் நலம் விசாரித்தார்.

இதனால் உற்சாகமடைந்த மருதமுத்து, சி.வெ. கணேசன் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார். உடன் அவரது மகன், செய்தியாளர் பாசார் செல்வேந்திரனும் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வு அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!