திருநெல்வேலி நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் டி. குருசாமி கலந்து கொண்ட தீந்தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை சார்பில் நூல் வெளியீட்டு விழா!!
திருநெல்வேலி :தீந்தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை 29.03.26 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கவியரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழாவைச் மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் நடத்தியது.காலையில் கவியரங்க நிகழ்வு நடைபெற்றது அந்த கவியரங்க நிகழ்வில் கவி தலைமையாக மதுரை கவி முத்து அவர்களும் காரைக்குடி சை சபிதா பானு அவர்களும் கலந்து கொண்டு தலைமை வகித்தனர். அதற்குச் சிறப்பு விருந்தினராக, சி. அருள் மைக்கேல் செல்வி (இணைப்பேராசிரியர்), திரு. T. குருசாமி (நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை - நிறுவனர்), சொ. சு. நெல்லை அருள் (தீந்தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை - நிறுவனர்)ஆகிய மூவரும் வருகைப் புரிந்திருந்தனர். வரவேற்பு நடனத்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பிறகு, சிறப்பு விருந்தினர்கள் மூவரும் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். அன்றைய நிகழ்ச்சிக்கு T. குருசாமி ஐயா மதிய உணவு ஏற்பாடு செய்தார். "இரசித்த சிறு துளிகள்" என்ற தலைப்பில் கவிதைப் புத்தகம் மூவரின் கரங்களால் வெளியிடப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களான, சி. அருள் மைக்கேல் செல்வி (இணைப்பேராசிரியர்), T. குருசாமி (நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை - நிறுவனர்) , சொ.சு. நெல்லை அருள் (தீந்தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை - நிறுவனர்) ஆகிய மூவரும் சிறப்புரை ஆற்றினார்கள். நூல் ஆசிரியர்களான பா. சுரேகா மற்றும் கா. தனலெட்சுமி ஆகிய இருவருக்கும் சிறப்பு விருந்தினர்கள் சி. அருள் மைக்கேல் செல்வி (இணைப்பேராசிரியர்), T. குருசாமி (நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை - நிறுவனர்) , சொ.சு. நெல்லை அருள் (தீந்தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை - நிறுவனர்) மற்றும் தீந்தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளையின் துணைச்செயலாளர் சோ. சோலை ராஜா ஆகிய நால்வரும் பொன்னாடை மற்றும் நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தனர்.அங்கு நிகழ்ந்த புத்தகக் கருத்துரையாளர்களுக்குச் சிறப்பு விருந்தினர்கள் சான்றிதழ் மற்றும் பொன்னாடை வழங்கினார்கள். நாட்டுப் பண்ணுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுப் பெற்றது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி


கருத்துகள்
கருத்துரையிடுக