சிறுதொண்டர் நாயனார் குருபூஜை !!

 

சிறுதொண்டர் நாயனார்  குருபூஜை !

 சிவன் சிறு தொண்டர் நாயனாரிடம் பிள்ளைக்கறி கேட்ட நிகழ்வு!

 பண்டைய சோழ நாட்டில் திருசெங்காட்டங்குடி என்ற ஊரில் மாமாத்திரர் குளத்தில் பிறந்த பரஞ்சோதியார் என்ற இயற்பெயர் கொண்டிருந்த சிறுத்தொண்டர் மன்னனின் படைத்தளபதியாக இருந்தார் திருச்செங்காட்டங்குடி தற்பொழுது நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது பரஞ்சோதியார் ஆயுர்வேதம் கற்றவர் அதோடு யானையேற்றம் குதிரை ஏற்றம் படைக்கலம் உள்ளிட்ட போர்க்கலைகளில் தேர்ந்தவர். தான் செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் சிவன் மீதான பற்று மிகுதியாக இருந்தார் சிவன் அடியார்களுக்கு தொண்டுகள் செய்தும் வந்தார் வாதாபி போரில் இரண்டாம் புலிகேசியை வெல்ல காரணமாக இருந்தவரும் இவரே மன்னர் பரஞ்சோதியாருக்கு போர் வெற்றிக்காக பல பரிசுகளை அளித்து அதோடு அவர் விருப்பப்படி சிவ தொண்டு செய்ய அனுப்பினர் அவர் சிறு தொண்டர் நாயனாராக சிவன் அடியார்களுக்கு அமுது படைத்து பின்தான்  தான் உண்டு பணி செய்து வந்தார் திருவெண்காட்டு நங்கை என்ற பெண்ணை மணந்து அருள்நெறி மாறாமல் வாழ்ந்தனர் அவர்களுக்கு சீராளன் என்ற மகன் பிறந்தான். சிறுத்தொண்டர் நாயனாரின் பக்தியை உலகம் அறிய ஒரு திருவிளையாடல் செய்தார் கரிய நிறத்தில் கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து பைரவ அடிகளார் வடிவில் வந்து சிறு தொண்டரிடம் அமுது வேண்டினார் யாம் வடநாட்டில் உள்ளோம் உம்மை காணவே வந்தோம் அமுது வேண்டுமென்றார். அதுவும் நர மாமிசம் வேண்டும் வயது 5 வயது சிறுவனது மாமிசம் வேண்டும் எனவும் பெற்றோர்களே அந்த கறியை எடுத்து சமைத்து தர வேண்டும் என்றும் கூறினார் தன்னிடம் எந்த விருப்பு வெறுப்புமின்றி சிவன் அடியார் தொண்டை மாபெரும் தொண்டு என்பதற்கு இணங்க தன் மகனையே சமைத்து அந்த அடியாருக்கு அமுது படைத்தார் என்னுடன் சேர்ந்து சிவனடியாராகிய நீயும் உணவு உண்ண வேண்டும் என அழைத்தார் அப்போதும் அடியாரது வேண்டுகோளை மறுக்காமல் அமர்ந்தார். உன்னுடைய பிள்ளையும் அழைத்து வா சேர்ந்து உண்ணலாம் என்று பைரவர் அடிகள் அழைத்ததும்  தம்பதியர் இருவரும் வெளியே சென்று சீராளா அமுத உண்ணலாம்  வா என்று அழைத்தனர் அப்பொழுது அன்று மலர்ந்த மலராக சீராளன் ஓடி வந்தான். சிறுத்தொண்டர் மற்றும் அவரது மனைவி குழந்தையை வாரி அணைத்து முத்தமிட்டனர் உள்ளே சென்று பார்த்தபோது பைரவ அடிகளை காணவில்லை அந்த திரு அமுதையும் காணவில்லை. சிவனின் திருவிளையாடல் என அறிந்து சிவனை நினைத்து வணங்கினர் அப்பொழுது சிவனார் உமையுடன் மற்றும் முருகனுடன் சோமாஸ் கந்தனாக காட்சி தந்தார் அதை கண்டு அங்கிருந்த அனைவரும் வீடு பேற்றை அடைந்தனர் வருடா வருடம் சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் சிறு தொண்டர் குருபூஜை நடைபெறும் 18. 04.2026 அன்று இரவு சிறுதொண்டர் திருபூஜை சிறப்புடன் கொண்டாடப்பட்டது. அங்கு சிவன் 

உத்தராபதீஸ்வரர் என்ற பெயரில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.

சிவகங்கை மாவட்ட செய்தியாளர் கவிப்பிரியா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!