சின்னமனூர் ஒன்றிய பகுதிகளில் போடி சட்டமன்ற வேட்பாளர். ஓபிஎஸ் சூறாவளி பிரச்சாரம் மக்கள் அமோக வரவேற்பு!!

தேனி மாவட்டம்,போடிநாயக்கனூர் சட்டமன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர். ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சின்னமனூர் ஒன்றிய பகுதிகளில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.

தொடர்ந்து குச்சனூர் பேரூராட்சி பகுதியில் பேரூர் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலும் மார்க்கையன்கோட்டை பேரூர் செயலாளர் முருகன் தலைமையிலும் எல்லப்பட்டி கெப்புராஜ் தலைமையிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பகுதிகளும் ஏராளமான பெண்கள்கும்பம் மரியாதை செய்தனர்

தொடர்ந்து அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பேசும் பொழுது மக்களாகிய உங்களுக்கு என்ன தேவை உங்களது கோரிக்கை என்ன என்று கேட்டு அதனை நான் நிறைவேற்றித் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்தார்.

குறிப்பாக குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோயில் ஏராளமான பக்தர்கள் வருகை தருவதையொட்டி  ஆண், பெண் இருபாலருக்கும் சுகாதார வளாகம் கட்டித் தருவேன் என வாக்குறுதி அளித்தார்.

பின்னர் எள்ளப்பட்டி சின்னமனூர் இணைப்புச் சாலை அமைத்து தருவேன் என்று தெரிவித்தார்.

ஒவ்வொரு பகுதிகளிலும் கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் மற்றும் தொண்டர்கள் ஏராளமான பெண்கள் சிறப்பான வரவேற்புரை அளித்தனர்.

தேனி மாவட்ட செய்தியாளர் ராஜா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!