ராணிப்பேட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளரை ஆதரித்து கட்சித் தலைவர் வேல்முருகன் அவர்கள் பிரச்சாரம்!!
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் விசுவநாதன் அவர்களை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்பொழுது அவர் பேசியதாவது.நம் நாட்டில் பெண்களுக்கு தாலி அறுக்கிற ஒயின்ஷாப் வேண்டவே வேண்டாம் போதையில் சிறு பிள்ளைகளிடம் மீறுகிறார்கள் கிழவிகளை கூட விட்டு வைப்பதில்லை ஆகையால் மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.என் மண்ணுக்காகவும் என் மக்களுக்காகவும் 40 ஆண்டு காலமாகவும் போராடி வருகிறேன் என் தமிழ்நாட்டு வேலைவாய்ப்பை தமிழர்களுக்கே என சட்டம் இயற்ற வேண்டும் என கேட்கிறேன்.தமிழ்நாட்டில் லஞ்சம் லாவண்யம் ஊழல் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சு பாலாற்றில் ஆந்திரா அரசு 52 தடுப்பணைகளை கட்டி விட்டார்கள் ஒரு சொட்டு தண்ணீர் கூட வருவதில்லை இராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை கழிவு நீர் அதனுடன் கலந்து வரும் ஆற்று நீர் அதைக் குடித்தால் என் தாய்மார்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காது. நாட்டில் கல்வி கடன் விவசாய கடன் தள்ளுபடி செய்யுங்கள் என கேட்கிறேன் தாய்மார்களுக்கு ரூபாய் 1000 கொடுக்கிறோம் என்கிறார்கள் ரூபாய் ஆயிரம் முக்கியமா கல்வி முக்கியமா.
இந்த ஆட்சியில் குடிக்கின்ற தண்ணீர் விற்றார்கள் இந்த குடிநீர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்க வேண்டும் என கேட்கிறேன் இந்த திமுக அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் என்னையும் என் கட்சிக்காரர்களையும் போலீசை விட்டு லத்தியால் அடித்து எங்கள் மண்டைகளை உடைத்தார்கள் ஒரு பிஎஸ்ஓ போலீஸ்காரர் என்னை கட்டிப்பிடித்து என்னை காப்பாற்றினார் அதனால் நான் காப்பாற்றப்பட்டேன்.மத்திய அரசின் தமிழ்நாடு வேலை ரயில்வே வேலை தமிழர் இல்லை கேட் கீப்பர் தமிழ் இல்லை எல்லா வேலைகளிலும் வட இந்தியர்களே பெல் கம்பெனி இன்கம் டேக்ஸ் வங்கி வேலை போஸ்ட் ஆபீஸ் வேலை இந்த வேலையில் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு முதலிடம் வேண்டும் என இந்த வேல்முருகன் கேட்டேன் வேறு என்ன குற்றம் செய்தேன் லஞ்சம் வாங்கினேனா லாட்டரி சீட்டு விட்டேனா ஒயின் ஷாப் பார் நடத்தினேனா பாலியல் குற்றத்தில் ஈடுபட்டேனா இந்த நியாயத்தை கேட்ட பச்சைத் தமிழன் வேல்முருகன் என மக்களிடம் நியாயத்தை கேட்டார் எங்கள் கூட்டணியில் இணைந்து வெற்றி பெற்றுவிட்டு எங்களையே கேள்வி கேட்கிறாயா கேட்டு என்னை வெளியே அனுப்பி விட்டார்கள் இப்போது எல்லா தொகுதிகளிலும் வேட்பாளர் நிறுத்தி போட்டியிடுகின்றேன் ஆகையால் ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு விஸ்வநாதன் ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்கு வெங்கடேசன் ஆகியோருக்கு கேமரா சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என வாக்காளர் வேலை கேட்டுக் கொண்டார்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்


கருத்துகள்
கருத்துரையிடுக