புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள செம்பூதி பகுதியில் புள்ளிமான் ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். புள்ளிமானின் உடலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் அதன் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.முழு தகவல்கள் விசாரணை முடிவில் வெளியாகும்.
புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்
கருத்துரையிடுக