தீவிபத்தில் கடை இழந்த பெண் வியாபாரிக்கு எம்எல்ஏ சு ரவி நிவாரணம்!!
அரக்கோணம் பழனி பேட்டையில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் அதிகமாக குடியிருக்கும் ஏ பி எம் சர்ச் பகுதி உள்ளது இங்கு கணவனை இழந்த பெண் ரஜிதா இறைச்சி கடை ஒன்றை நடத்தி வருகிறார் இவரது கடை திடீரென தீ விபத்தில் சேதம் அடைந்தது இது குறித்து அதிமுக நகர அவைத் தலைவர் வழக்கறிஞர் பத்மநாபன் சட்டமன்ற உறுப்பினர் சுரவிக்கு தகவல் தெரிவித்தார் இதனை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் ரவி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி நிவாரணத் தொகையும் வழங்கினார் அப்போது நகர செயலாளர் பாண்டுரங்கன் முன்னாள் நகர் மன்ற தலைவர் கண்ணதாசன் நகர இளைஞரணி இணை செயலாளர் ஏ.பி.எம் டி சிவா மற்றும் வட்ட செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட கட்சியினர் உடன் இருந்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக